Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நேரத்தைவிட முக்கியத்துவமே பெரிது- நட்டி என்கிற நட்ராஜ்

Last Updated: புதன், 6 டிசம்பர் 2017 (20:50 IST)
‘படத்தில் வரும் நேரத்தைவிட, கேரக்டரின் முக்கியத்துவமே பெரிது’ என நடிகர் நட்டி தெரிவித்துள்ளார்.
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகவுள்ள படம் ‘ரிச்சி’. இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, இன்னொரு ஹீரோவாக நட்டி நடித்துள்ளார்.

“சுவாரஸ்யமான கதையையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் கொண்ட படம் தான் 'ரிச்சி'. இரண்டு ஹீரோக்களில் ஒருவரான, ரிச்சி கதாபாத்திரத்தை எதேச்சையாக சந்திக்கும் படகு மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இது. இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் கெளதம் ராமசந்திரன் அவ்வளவு சிறப்பாகவும் வலுவாகவும் எழுதியுள்ளார்.


ஒரு கதாபாத்திரம் எவ்வளவு நேரம் திரையில் வருகின்றது என்பதை விட அது எவ்வாறான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதே முக்கியம் என்பதை நம்புபவன் நான். அவ்வகையில் 'ரிச்சி' படத்தின் எனது இந்த கதாபாத்திரம் மற்றும் இக்கதை படமாக்கப்பட்டுள்ள விதம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. டிசம்பர் 8 முதல் 'ரிச்சி' தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்” என்கிறார் நட்டி.


இதில் மேலும் படிக்கவும் :