Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நிவின் பாலி படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்

Nivin Pauly
Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (10:06 IST)
நிவின் பாலி ஜோடியாக நடிக்க இருந்த படத்தில் இருந்து அமலா பால் வெளியேறியுள்ளார்.
‘36’ வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிவரும் மலையாளப் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரின் கதை இது. நெடுஞ்சாலைகளில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்து, இல்லாத மக்களுக்கு கொடுப்பதுதான் அவர் வேலை.
 
இந்த உண்மைக் கதையில், ஹீரோவாக நடிக்கிறார் நிவின் பாலி. ஹீரோயினாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், வேறு சில படங்களில் அமலா பால் பிஸியாக இருப்பதால், இந்தப் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, படத்தில் இருந்து அமலா பால் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :