மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்சில் தமிழ் பட நடிகை! யார் தெரியுமா?

Last Updated: திங்கள், 11 மார்ச் 2019 (15:12 IST)
'ஒரு நாள் கூத்து' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமா ரசிகர்களை ஒரே படத்தில் ஒட்டுமொத்தமாக கவர்ந்தார். அதன் பிறகு பொதுவாக எம்மனசு தங்கம்,  திமிரு பிடிச்சவன்,  பார்ட்டி,  டிக் டிக் டிக் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். 


 
இந்நிலையில், தற்போது நிவேதாவிற்கு அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன், அவெஞ்சர்ஸ் படங்கள் இடம்பெறும் தொடரான மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சின் ஒரு  புதிய படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளதாம். 


 
இதைப்பற்றி நடிகை நிவேதா , "இது என் நீண்ட நாள் கனவு. எப்படியாவது ஆடிஷனில் சிறப்பாக நடித்துக்காட்டி வாய்ப்பைப் பெற்றுவிடுவேன்," என்றார். இதன் மூலம் நடிகை நிவேதா பெத்துராஜின் நீண்ட நாள் கனவு நெருங்கி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :