1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (19:18 IST)

ரஜினியின் 'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட்!

lal salam
ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சினிமாவின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிப்பில் ஜெயிலர் படத்திற்குப் பின் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் இணைந்து, மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.

இப்பட ஷூட்டிங்  நிறைவடைந்த  நிலையில்,  இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில், இப்படத்தின் தேர்த்திருவிழா என்ற முதல் சிங்கில் சங்கர் மகாதேவன் குரலில் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டெட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, லால் சலாம் படத்தின்  2 வது சிங்கில் வரும் 15 ஆம் தேதி வெளியாகும் என்று லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, புதீய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.