திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (13:35 IST)

கபில்தேவ் பிறந்தநாள்...புதிய போஸ்டர் வெளியிட்டு ’லால் சலாம்’ படக்குழு வாழ்த்து

lal salaam
ரஜினியின் ‘லால் சலாம்’ படக்குழு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

சினிமாவின் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிப்பில் ஜெயிலர் படத்திற்குப் பின் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் , விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் இணைந்து, மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ள நிலையில், இந்த படத்தில் ரஜினி  சம்மந்தமான சில காட்சிகள் மும்பை உள்ளிட்ட  சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்ட நிலையில், இப்பட ஷூட்டிங் முடிந்த நிலையில்,  இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எனவே  2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில், இப்படத்தின் பாடல் வெளியான நிலையில்,  ரஜினியின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று லால் சலாம் படக்குழு அவர் சம்பந்தப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்றவருமான கபில்தேவ்-ன் பிறந்த நாளை முன்னிட்டு, லால் சலாம் படக்குழு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டு, வாழ்த்துகள் தெரிவித்துள்ளது.

அதில், சூப்பர் ஸ்டார் ரஜினியும், கபில்தேவும் சிரித்துக் கொண்டே நடந்து வருவது போன்ற போஸ்டர்  வைரலாகி வருகிறது.

இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.