திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (18:15 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லால்சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். 
 
மேலும் ஜீவிதா செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran