வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (11:24 IST)

'நவ' ரசங்களை தரும் 'நயன்' தாராவ யாருக்குத்தான் பிடிக்காது!..

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,  2003ம் ஆண்டு ஜெயராமுடன் மலையாள படமான மனசின் நாக்கரே படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். 


 
அதைத்தொடர்ந்து 2005ம் ஆண்டு ஐயா படம் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகம் ஆனார் நயன்தாரா. ஒருவார்த்தை பேச ஒருவருஷம் காத்திருந்தேன் என்ற பாட்டு மூலம் நயன்தாரா ஏகத்துக்கும் பிரபலம் ஆனார். அந்த படத்தில் மாமாவுக்காக காத்திருக்கும் காதலியாக நடித்திருப்பார்.
 
அதன் பிறகு   அதன்பிறகு ரஜினியுடன் சந்திரமுகியில் ஜோடியாக நடித்தார். அதில் அவரது நடிப்பிக்கு பெரிய ஸ்கோப் இல்லை. எனினும் சூர்யாவுடன் கஜினி,  சிம்புவுடன் வல்லவன், அவரது நடிப்புக்கு நல்ல ஸ்கோப்பாக இருந்தது. வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவை காதலித்தார். அந்த படத்தில் படுகவர்ச்சியமாகவும் நயன்தாரா நடித்திருப்பார். படம் முடிந்த பின்பு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் சிம்புவுடன் காதலை முறித்துக்கொண்டார். அந்த சர்ச்சைகளுக்கு இடையில் வல்லவன் படமும் சூப்பராக ஓடியது. சிம்பு நடிப்பில் பெரும் வரவேற்பை  பெற்ற படம் என்றால் அது  வல்லவன் தான். இந்த படத்தில் காதல், காமம் 
இரண்டிலும் படுபயங்கரமாக நடித்திருப்பார்.


 
நயன்தாரா அஜித்துடன் 2007ம் ஆண்டு நடித்த பில்லா படம், ஒரு நடிகையாக பெரும் புகழை பெற்று தந்தது. அதுவரை டூயட் பாடும் ஹீரோயினாக நடித்துவந்த நயன்தாரா அந்த படத்தில் நீச்சல் உடையில் மிரட்டலான தோற்றத்தில் நடித்திருப்பார். அதுவரை மக்கள் பார்க்காத நயன்தாராவை பார்த்திருப்பார்கள். அம்மாடியோ இது நயன்தாராவா இது என வாயை பிளக்கவைத்தார்.


 
அதைத்தொடர்ந்து கதைகளில் கவனம் செலுத்த தொடங்கிய நயன்தாரா நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.தனுஷ் உடன் யாரடி நீ மோகினி படத்தில் அழகு தேவதையாக நடித்திருப்பார் , சூர்யாவுடன் ஆதவன், ஆர்யாவுடன் பாஸ் என்ற பாஸ்கரன் (2010), ஆகிய படங்களில் காமெடியிலும் கலக்கி இருப்பார்,
 
ராஜா ராணி (2013) படத்தில் காதல் தோல்வி அடைந்த காதலியாக நடித்திருப்பார் நயன்தாரா.  அஜித்துடன் ஆரம்பம் (2013) படத்தில் கவர்ச்சி மற்றும் ஆக்சனில் அசத்தியிருப்பார். 


 
மாயா (2015) என்ற திகில் படத்தில் அச்ச உணர்வை நமக்கு அதிகரித்திருப்பார். நானும் ரவுடி தான் (2015) படத்தில் காது கேளதாக பெண்ணாக வாழ்ந்திருப்பார். அறம் படத்தில் மாவட்ட கலெக்டராக அதிகாரியாக சிறந்த ஆளுமை உள்ள பெண்ணாக நயன்தாரா மிரட்டியிருப்பார்.
 
இதையடுத்து கோலமாவு கோகிலா படத்தில் அப்பாவி பெண் போன்ற கேரக்டரில் கஞ்சா வியாபாரியாக, கொலைகாரியாக நடித்து அம்மாடியே என எல்லாரையும் வாயை பிளக்க வைத்தார்.  இப்படி என்ன வேடம் கொடுத்தாலும் அத்தனைக்கு தான் தகுதியானவள் என நடிப்பின் நவரசங்களையும் கொட்டி இருப்பார். இததான் நயன்தாரா...  இதனால் தான் அவரை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். ஒரு நடிகை என்பவள் ஹீரோவுடன் ஆடுவதுதான் என்று இருந்த வரலாறை மாற்றிக்காட்டியவர் நயன்தாரா. காதல், பாசம், கவர்ச்சி, வில்லத்தனம், அப்பாவி, காமெடி, ஆளுமை, பயம், பவ்யம் என நவரசங்களை கொட்டியிருப்பார் நயன்தாரா. இதனால் தான் 15 வருடங்களை கடந்தும் நம்பர் 1 நடிகையாக நீடிக்க 
காரணம்.


 
தற்போது அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்போது கொலையுதிர் காலம் படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்து வருகிறார்.