1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (19:05 IST)

ஜனவரியில் மிரட்ட வரும் கொலையுதிர் காலம்!

நயன்தாராவின்  கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி வெளியானது !


 
நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. தவிர ஐரா, கொலையுதிர் காலம், சைரா நரசிம்ம ரெட்டி, லவ் ஆக்‌ஷன் ட்ராமா உள்ளிட்டப் படங்கள் இவரது கைவசம் உள்ளது. 
 
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என நயன்தாராவின் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது.
 
வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. 
 
இதனை இந்தியில் பிரபு தேவா, தமன்னாவை வைத்து இயக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் த்ரில்லர் களத்தில் படமாக்கப்பட்டிருக்கும் 'கொலையுதிர்காலம்' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.