வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (14:48 IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை துவங்கிய நயன்தாரா - விக்னேஷ்!

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஆரம்பித்தார். 


 
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.  நானும் ரவுடி தான் படத்தில் இருந்து நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவினாலும், நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த திட்டத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். இருப்பினும் லிவிங் டுகேதர் பாணியில் இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.


 
மேலும் அவ்வப்போது வெளிநாடு மற்றும் இந்தியாவிற்குள்ளும் இருவரும் சுற்றுலா செல்வதும் வழக்கம். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடுவர்.
 
அதுபோல் தற்போது சில புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நயன்தாரா வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான வேலைகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் மரம் செட் செய்து அலங்கரித்துள்ளனர்.


 
அந்த மரத்திற்கு அருகில் இருந்தபடியே இருவரும் செல்பி எடுத்து அதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், "கிறிஸ்துமஸ் மரம் செட் செய்துவிட்டோம். இனி எங்கும் கொண்டாட்டம் தான்" என நயன்தாரா தெரிவித்துள்ளார்.