வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (15:43 IST)

இசையமைப்பாளருக்கு நன்றி சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.



 
மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘ஸ்பைடர்’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். பின்னணி இசைக் கோர்ப்பு முடிந்த நிலையில், அற்புதமாக வந்திருப்பதாக ட்வீட்டியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். “மிகச்சிறப்பான பின்னணி இசையைத் தந்ததற்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘கஜினி’, ‘துப்பாக்கி’ படங்கள் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.