Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நவராத்திரியில் கொலு வைத்து வழிபாடு செய்வது ஏன் தெரியுமா?

Widgets Magazine

மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.

 
 
அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். “ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன் என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். எனவே, அம்பிகைக்கு பிடித்த  பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய  அங்கம் பெறுகிறது.

 
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
 
1வது படி - ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்).
2வது படி - இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்).
3வது படி - மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்).
4வது படி - நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்).
5வது படி - ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்).
6வது படி - ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்).
7வது படி - மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி - தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி - பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
 
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும்போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம்  செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
 
இரண்டாம் நாள்: இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி  ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்news

நவராத்திரியின் முதல்நாள் செய்யவேண்டிய பூஜை முறைகளும், மந்திரங்களும்

வீடுகளிலும், கோவில்களிலும் நவராத்திரி பூஜை இன்று முதல் ஆரம்பமாகிறது. வீடுகளில் கொலு வைக்க ...

news

நவராத்திரியை பல்வேறு பெயர்களில் மாநிலங்களில் வழிபடும் முறை

புரட்டாசி வளர்பிறை பிரதமை தொடங்கி, நவமி வரையுள்ள ஒன்பது நாள் மேற்கொள்வது நவராத்திரி ...

news

விஜயதசமி வெற்றித் திருநாளில் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் வழக்கம்...!

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும், ...

news

நவராத்திரி பூஜையின்போது சொல்லப்படும் நவராத்திரி நாமாவளி!

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய ...

Widgets Magazine Widgets Magazine