எம்.ஆர்.பி. கட்டணத்தில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது - கேண்டீன் உரிமையாளர்கள் அறிவிப்பு...


sivalingam| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (13:06 IST)
தமிழ் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திரையரங்குகளில் உள்ள கேண்டீனில் MRP விலைக்கே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது அரசிடம் புகார் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.


 
 
இந்த அறிவிப்பு திரையரங்குகளில் கேண்டீன் நடத்துபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் உள்ள கடையில் வியாபாரம் செய்வதற்கும் தியேட்டரில் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் திரையரங்க கேண்டீன் நடத்த அதிக தொகை கொடுக்கப்படுவதால் எம்.ஆர்.பி. கட்டணத்தில் பொருட்களை விற்பனை செய்வது சாத்தியமில்லை என்றும் கேண்டீன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி வெளியில் உள்ள கடைகள் போன்று காலை முதல் இரவு வரை திரையரங்க கேண்டீனில் விற்பனை இருக்காது. ஒரு படத்தின் இடைவேளை நேரமான வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே வியாபாரம் ஆகும். அந்த வகையில் நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் மட்டுமே வியாபாரம் இருக்கும் நிலையில் விஷாலின் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றும் கேண்டீன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :