Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேளிக்கை வரிக்கு முடிவு கிடைக்கும் வரை போராட்டம்: விஜய்க்கு மறைமுக பதிலடி கொடுத்த விஷால்


sivalingam| Last Modified புதன், 11 அக்டோபர் 2017 (10:06 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையிடப்படும் என்றும், அதற்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றும் விஷாலுக்கு விஜய் மறைமுக எச்சரிக்கை கொடுத்ததாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்


 
 
இந்த நிலையில் விஜய்யின் மறைமுக எச்சரிக்கைக்கு விஷால் மறைமுக பதிலடி கொடுத்துள்ளார். நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 'கேளிக்கை வரி பிரச்சனை குறித்து விரைவில் முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், கேளிக்கை வரி பிரச்சனை முடியும் வரை புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்
 
இந்த நிலையில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தவிர மற்ற அனைத்து திரையரங்குகளும் 'மெர்சல்' படத்தை திரையிட தயார் நிலையில் இருப்பதால் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி 'மெர்சல்' தீபாவளி அன்று வெளியாகும் என்பதே இப்போதைய நிலை


இதில் மேலும் படிக்கவும் :