1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (02:00 IST)

கபாலி, பாகுபலி 2 படங்களை அடுத்து மெர்சலுக்கு கிடைத்த கெளரவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களுக்கும் கிடைத்த ஒரு பெருமை விரைவில் வெளியாகவுள்ள 'மெர்சல்' படத்திற்கு கிடைக்கவுள்ளது



 
 
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் இதுவரை கபாலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது படமாக 'மெர்சல்' படத்தை திரையிட இத்திரையரங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த தகவலை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆதித்தி ரவீந்திரநாத் உறுதி செய்துள்ளார். இந்த செய்தி தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெருமைக்குரிய செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.