வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (14:09 IST)

அஜித்தைப் பின்னுக்குத் தள்ளிய விஜய்

அதிக தியேட்டர்களில் ரிலீஸாவதன் மூலம், அஜித்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னால் சென்றிருக்கிறார் விஜய்.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. 3 வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகிறது. தமிழில் வெளியாகும் அதேநாளில், மலையாளத்திலும் இந்தப் படம் ரிலீஸாகிறது. ‘பாகுபலி’ படத்தை வெளியிட்ட குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம், ‘மெர்சல்’ படத்தையும் வெளியிடுகிறது. இதுவரை எந்தப் படத்திற்கும் இல்லாத அளவுக்கு, 350 தியேட்டர்களில் ரிலீஸாகிறது ‘மெர்சல்’.

உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமே 320 தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித் நடித்த ‘விவேகம்’ படம் 309 தியேட்டர்களில் ரிலீஸானது. 350 தியேட்டர்களில் ஒரு படம் ரிலீஸாவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.