1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (12:46 IST)

அதர்வா படத்தை ரிலீஸ் செய்யும் விஜய் தயாரிப்பாளர்

அதர்வா நடித்துள்ள படத்தை, விஜய் படத்தின் தயாரிப்பாளர் வாங்கி வெளியிடுகிறார்.


 

 
இயக்குநர் ராம.நாராயணனின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ், அவரது மறைவுக்குப் பிறகு தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் என மாற்றம் பெற்றுள்ளது. பல படங்களைத் தயாரித்த இந்த நிறுவனம், 100வது படமாக விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்துள்ளது. படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், வாங்கியும் வெளியிட்டு வந்த இந்த நிறுவனம், இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்துள்ளது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தை வாங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது அதர்வா நடித்துள்ள ‘செம போத ஆகாத’ படத்தையும் வாங்கியுள்ளது. நவம்பரில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது