வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (11:33 IST)

40 நாட்களில் 4 முறை தமிழகம் வந்த மோடி இப்போது வராதது ஏன்? அமைச்சர் மனோதங்கராஜ்

MANO THANGARAJ
2019 ஜனவரி முதல் மார்ச்  வரையில் 40 நாட்களில் நான்குமுறை தமிழகம் வந்த மோடி இப்போது வராதது ஏன் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
மக்களுக்கு உரிமை தொகை வழங்கும் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில்! ஆபத்தில் இருக்கும் மக்களிடம் ஆணவம் பேசும் மோடி அரசு மத்தியில்!
 
2017-ல் ஈசா யோகா மையத்திற்கு வருகை தந்த மோடி!  2019 ஜனவரி - மார்ச்-  வரையில் 40 நாட்களில் நான்குமுறை தமிழகம் வந்த மோடி!  சென்னையும், தென் மாவட்டங்களும் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரில் தத்தளிக்கும்போது தமிழ்நாட்டிற்கு வராதது ஏன்? மக்களுக்கு உரிமைப்பட்ட நிதியை தராதது ஏன்?
 
 வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நிதியமைச்சர் நிர்மலா பேரிடரால்  சிதிலமாக்கப்பட்ட தமிழர்களை அவமானப்படுத்தி, ஆரிய, ஆணவ அரசியல் பேசுவதேன்?
 
 ஒரே நாடென்பதில் தமிழ்நாடும் உண்டுதானே? பிறகு ஏன் பாரபட்சம்.  மாபெரும் கடல்கோல்களையே எதிர்த்து நின்று களமாடிய புறநானூற்றுத் தமிழினம் மீண்டு எழும்!
மீண்டும் எழும்! எங்கள் திராவிடப் போர்முரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்!
 
 
Edited by Siva