திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 21 டிசம்பர் 2023 (07:31 IST)

தமிழகம், கேரளாவை அடுத்து கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்..!

தமிழக மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கேரளாவில் பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்திலும் சளி காய்ச்சல் உள்ளவர்கள் மாஸ்க் அணியஅறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் தமிழகம் கேரளாவை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு உயர்ந்து வருவதாகவும், கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணிப்போருக்கு 'மாஸ்க்' கட்டாயம் என்றும், கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
அதேபோல் கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாஸ்க் கட்டாயம் என்றும், மக்கள்  விரும்பினால் மாஸ்க் அணியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva