வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (09:29 IST)

கனமழையால் உடைந்த தரைப்பாலம்! – வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதி!

Flood
தரைப்பாலம் உடைந்ததால் மூன்று நாட்களாக பொதுமக்கள் அவதி பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.


 
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு செய்த கன மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பி ஊருக்குள் மழை நீர் புகுந்தது இதனால் தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால்  மூன்று நாளாக பாதிக்கப்பட்டு பொதுமக்களின்  அன்றாட வாழ்க்கையை முடக்கி உள்ளது.

தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் இருந்து நக்கனேரி, பட்டியூர், சிதம்பராபுரம், பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் இப்பகுதி பள்ளி செல்லும்  மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் அதேபோல் பாலத்திற்கு அந்தப் பக்கத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள்  இராஜபாளையம் செல்ல வேண்டும் என்றால் இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டும் .

இதுவரை தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் தாங்களாகவே கயிறு கட்டி அவசர தேவைக்காக தரைப் பாலத்தை கடந்து செல்லும் அவல நிலையில் உள்ளது சம்மந்தபட்ட நிர்வாகம் உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.