புதன், 6 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:30 IST)

மகாராஜா படத்தை என் அப்பா நிராகரித்தாரா?... சாந்தணு வெளியிட்ட ஆதங்கப் பதிவு!

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. தியேட்டரில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த திரைப்படம் ஓடிடியில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது, 1.7 கோடி பார்வையாளர்களோடு முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் ஒரு நேர்காணலில் பேசும்போது, இந்தக் கதையை முதலில் சாந்தணுவிடம் சொன்னதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென ‘மகாராஜா கதையை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? பாக்யராஜ்தான் இந்த கதையை வேண்டாம் என்று சொல்லி இருப்பார்’ என்று அவதூறு பதிவுகள் வெளியாகின.

இதற்கு விளக்கம் அளிக்கும்படி சாந்தணு வெளியிட்டுள்ள பதிவில் “முதலில் நான் மகாராஜா திரைப்படம் உயிர்பெற்றதற்காக நித்திலனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்குக் கிடைக்கும் அங்கீகாரங்களைப் பார்க்கும் போது நான் அப்போது சரியான திரைக்கதையைதான் தேர்வு செய்துள்ளேன் என்பதை சொல்கிறது. என்னைப் பற்றி நித்திலன் இப்போது குறிப்பிட்டதற்காக நன்றி.

முதலில் இந்த கதையை நானோ என் தந்தையே நிராகரிக்கவில்லை. முதலில் இப்படி ஒருக் கதையை நான் தேர்வு செய்ததையே என் தந்தை அறியவில்லை. அப்போது இந்த கதைக்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.  ஆனால் இன்று கதைதான் முக்கியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் எப்போதும் சிறந்த திரைக்கதைகளுக்கு தயாராக இருக்கிறேன். காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்” எனக் கூறியுள்ளார்.