லோகேஷ் கனகராஜைக் கோர்த்துவிட்ட ஆடை பட இயக்குனர்… வைரலாகும் மீம்!

Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (17:46 IST)

மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில் அவரது நண்பர் ரத்னகுமார் அவரை கேலி செய்யும் விதமாக ஒரு மீமை பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த திரைப்படம் திரையரங்குகள் திறந்தவுடன் பிரமாண்டமாக வெளியாகும் என்பதும் தெரிந்ததே. கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து எவன் என்று நினைத்தாய் என்ற படத்தினை இயக்க உள்ளார். இது சம்மந்தமாக அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அப்போது அதை ரிட்வீட் செய்த லோகேஷின் நண்பரும் மாஸ்டர் படத்தின் இணை இயக்குனருமான ரத்னகுமார் ஒரு ’மீமைப் பகிர்ந்து மாஸ்டர் அப்டேட் என்னாச்சு ‘ எனக் கேட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :