லட்சுமி மேனனின் ஸ்லிம் சிக்ரெட் என்ன தெரியுமா??

Last Updated: புதன், 13 டிசம்பர் 2017 (21:21 IST)
நடிகை லட்சுமி மேனன் குடும்ப படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் றெக்க. தற்போது வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.

கைவசம் உள்ள பிரபுதேவாவிற்கு ஜோடியாக யங் மங் சிங் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அந்த புகைப்படத்தில் லட்சுமி மேனன் ஸ்லிம்மாக காணப்பட்டார். தற்போது ஸ்லீம் ஆனது குறித்து அவரே தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சிறிது நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தேன், தற்போது படங்களில் கமிட் ஆகி வருகின்றேன்.

உடல் ஸ்லீம்மாக முழு எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். வொர்க் அவுட் எல்லாம் செய்ததே இல்லை. மேலும், அம்மா என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார் அவ்ளோதான் என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :