1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:49 IST)

அன்புச்செழியனுக்கு ஆதரவு: விஜய் ஆண்டனிக்கு அதிரடி பதிலளித்த கரு.பழனியப்பன்

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என திரையுலகம் குற்றஞ்சாட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அன்புச்செழியனுக்கு ஆதரவாக ஒருசில திரையுலக பிரபலங்கள் பேசி வருவது திரையுலகினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் முதன்முதலில் அன்புச்செழியன் நல்லவர் என்ற சான்றிதழை கொடுத்தார். அவருக்கு பின்னர் சீனுராமசாமி, தேவயானி, சுந்தர் சி உள்பட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் கரு.பழனியப்பன் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்காக ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

விஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்! விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும் என்று கூறியுள்ளார்.