திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:07 IST)

தன் மீதான அவதூறு வழக்கு… விசாரணைக்கு தடைவிதிக்க கங்கனா மனுதாக்கல்!

பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா.

இந்நிலையில் அவர் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கங்கனா ரணாவத் தன் மேல் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.

2020 ஆ ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா பிரபல நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி சர்ச்சையான கருத்துகளைப் பகிர்ந்தார். அதையடுத்து ஜாவேத் அக்தர் கங்கனா மீது அவதூறு வழக்கு ஒன்றை மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் தொடர, அது சம்மந்தமான விசாரணைக்கு தடை விதிக்க கோரியிள்ளார் கங்கனா.