1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (21:02 IST)

2023 கூகுள் டிரெண்டிங்கில் இடம்பிடித்த டாப் 10 படங்கள்!

Jawan
2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களில் கூகுளில்  இந்திய அளவில் டிரெண்டிங்கான படங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தாண்டு இந்திய சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் கூகுளில்  இந்திய அளவில் டிரெண்டிங்கான படங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்  வெளியான ஜவான் படம் நம்பர் 1 இடத்திலும், கட்டார் 2 2வது இடத்திலும். ஓப்பன்ஹைமர் 3 வது இடத்திலும், ஆதிபுரூஸ் 4 வது இடத்திலும், பதான் 5  வது இடத்திலும், தி கேரளா ஸ்டோரி 6வது இடத்திலும் ஜெயிலர் 7 வது இடத்திலும், லியோ 8வது இடத்திலும், டைகர் 3- 9வது இடத்திலும், வாரிசு 10 இடத்திலும் உள்ளன.