திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (14:19 IST)

பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை கங்கனா ரனாவத்

kangana ranaut
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ், ஜான்சி ராணி, தமிழில் தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து சந்திரமுகி2  படத்தில் நடித்திருந்தார்.
 
இப்படத்தை அடுத்து மாதவனுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
 
 இந்த நிலையில் சமீப காலமாகவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும்  நடிகை கங்கனா ரனாவத், பாஜகவுக்கு ஆதரவாளராக இருந்து வருவதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
 
பாஜக ஆட்சியில் விளையாட்டு சினிமா பிரபலங்களுக்கு கெளரவ எம்பி பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.