1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (12:16 IST)

விஷாலுடன் நடிக்கும் ‘ஜிமிக்கி கம்மல்’ சரத்

‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய சரத், விஷால் படத்தில் நடிக்கிறார்.


 

 
மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘வெளிப்படிண்டே புஸ்தகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார் நடிகர் சரத். படம் வெளியானபோது இந்தப் பாட்டுக்கு கிடைக்காத புகழ், கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ஷெரில் உள்ளிட்ட பெண்கள் ஆடிய வீடியோவால் கிடைத்தது.

இதனால், அந்தப் பாடல் மறுபடியும் கவனம்பெற, அதில் ஆடிய சரத்துக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் சரத். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். சிறிய வேடம் என்றாலும், பேர் சொல்லும் படமாக இருக்குமாம்.
அத்துடன், ராஜு முருகன் கதை, வசனத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கிறார் சரத். இந்தப் படத்தை, ராஜு முருகனின் அண்ணனான சரவணன் ராஜேந்திரன் இயக்குகிறார். நவம்பர் 27 முதல் கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.