ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (13:22 IST)

'விஜய் 68 'பட இயக்குனர் இவர்தான்? அப்போ பட ஹிட் தான்!

Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்  பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜோடியாக  நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ், 'விஜய்67' படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், 'விஜய் 68' படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிகியாகிறது.