1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (16:52 IST)

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள படம் மாவீரன். இப்படத்தில்  விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் வெற்றி பெற்ற நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்துள்ளார், விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில், வில்லனாக நடிக்க விஜய்சேதுபததியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமா பட ஹீரோ நிதினுக்கு வில்லனாக நடிக்க ரூ.16 கோடி சம்பளம் கேட்ட  நிலையில் மாவீரன் படத்திற்கும் அதிகச் சம்பளம் கேட்டு கொடுக்கப்பட்டால் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பிருப்பதாகக கூறப்படுகிறது.