வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (14:24 IST)

கமலின் விக்ரம் படம் புதிய சாதனை...

லோகேஷ் இயக்கத்தில்  கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத்  பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தார்.

அனிருத் இசையமைத்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாகரூ. 500 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

இந்நிலையில்,  ஓடிடியில் வெளியான  விக்ரம் திரைப்படம் முதல் வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

சாதனை மேல் சாதனை படைத்து வரும் விக்ரம் திரைப்படம்  2022 ஆஅண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடும் ஐஎம்டிபி பட்டியலில் கமலின் விக்ரம் படம் 8-6  ரேட்டிங் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

கமலின் விஸ்வரூபம் பட வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் தான் அவருக்கு வெற்றி மற்றும் லாபத்தைக் கொடுத்துள்ளது. அத்துடன்  ஒரு படம்  வெளியாகி 1 வாரத்திலேயே எடுத்துவிடும் சூழலில் விக்ரம் படம் மட்டும்  இன்னும் ஓடிக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் பலரது ஆதரவுகளைப் பெற்ற விக்ரம் படம் வெளியாகி இன்றுடன் 50 வது நாளாவதால் ரசியகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.