வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (17:29 IST)

'கபாலி',, விவேகம்' படங்களை 'மெர்சல்' முந்தியது உண்மையா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.20 கோடி, தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.15 கோடி என்று இருக்கும் நிலையில் இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் முதல் நாள் தமிழக வசூல் ரூ.23 கோடி என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே கபாலி, விவேகம் படத்தின் முதல் நாள் வசூலை 'மெர்சல்' முந்தியதாக கருதப்பட்டாலும் உண்மையாக என்ன நடந்தது என்பதை பார்ப்போம்



 
 
கபாலி, பட வெளியீட்டின்போது ஜிஎஸ்டி 28% மற்றும் உள்ளூர் வரி 8% என்பது இல்லை. 'ஆனால் இந்த 36% 'மெர்சல்' வசூலில் இணைந்துள்ளதால் ரூ.23 கோடி என்று வந்துள்ளதாகவும், உண்மையில் இந்த 36%ஐ கழித்துவிட்டு பார்த்தால் 'மெர்சல்' திரைப்படத்தின் வசூல் 14.50 கோடி மட்டுமே என்றும் விநியோகிஸ்தர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ரூ.14.50 கோடியில் திரையரங்க கட்டண உயர்வும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் 'விவேகம்' படத்தின்போது ஜிஎஸ்டி மட்டுமே இருந்தது என்பதால் 8% மற்றும் திரையரங்க கட்டண உயர்வையும் கழித்தால் உண்மையில் 'மெர்சல்' படத்தின் வசூல் கபாலி, விவேகம் படத்தின் வசூலை முந்தவில்லை என்பதே உண்மை என வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.