வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (17:35 IST)

மெர்சல் படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் ட்வீட்

விஜய்யின் 61-வது படமான மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'நீதானே நீதானே'  பாடல்கள் வெளியாகி வைரலாகியது.

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் இறுதிப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்  ஜி.வி.பிரகாஷ். இருவருமே உறவுக்காரர்களாக இருந்தாலும், நீண்ட நாட்களாக ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்புக்காக காத்திருந்தார்  ஜி.வி.பிரகாஷ்.
 
விஜய், ஏ.ஆர். ரகுமான் ஆகியோரின் சினிமா பயணத்தில் 25 வருடத்தில் வெளியான படம் மெர்சல். இந்த படத்தின் ஆடியோ  வெளியீட்டு விழாவில் இவர்களது 25வது வருடத்திற்கு நிறைய பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறியிருந்தனர். பயங்கர எதிர்ப்பார்ப்பில் இருந்த பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக சொன்ன தேதியில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் தற்போது  கலக்கி வருகிறது.

 
இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மெர்சல்  படத்தையும், பட பாடல்களையும் பெரிய ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார்.