ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (15:59 IST)

அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை; கருத்து தெரிவித்த விஜய்யின் தந்தை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் 'மெர்சல்'. படம் வெளியாவதற்கு முன்பே படத் தலைப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, விலங்குநல வாரியத்தியின் சான்றிதழ் பிரச்சனை (NOC), சென்சார் சான்றிதழ் கிடைக்கத்  தாமதம் என பல தடைகளைச் சந்தித்தது. ஒருவழியாக படம் வெளியாகி, உலகமெங்கும் ரசிகர்களின் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

 
இப்படத்தில் விஜய் பேசிய வசனங்களின் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 'மெர்சல்' படத்திற்கு தமிழக பா.ஜ.க-வினர்  தொடர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். 
 
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மெர்சல் திரைப்படத்தில் வரும்  அரசியல் வசனங்களுக்கு பா.ஜ.க.தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியனாக பிறந்த  அனைவருக்கும் அரசாங்கத்தை விமர்சிக்க உரிமையிருப்பதாக இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. விஜய், நடிகர்  என்றாலும் அவரும் சாதரண குடிமகன்தான். அவருக்கும் உணர்ச்சிகளும் இருக்கும். அதனால் அரசாங்கத்தை விமர்சிக்கும்  அத்தனை உரிமையும் விஜய்க்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
இதை நான் விஜய்யின் தந்தையாக கூறவில்லை என்றும், நடிகர்கள் அனைவரும் தனக்கு இருக்கும் ஊடக மதிப்பை பயன்படுத்தி  அரசை விமர்சிப்பது தவறில்லை என்றும், நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.