Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமார் மகள்

வியாழன், 5 அக்டோபர் 2017 (11:32 IST)

Widgets Magazine

சரத்குமாரின் இன்னொரு மகளான பூஜாவும் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

 
 
சரத்குமார் மகளான வரலட்சுமி சரத்குமார், தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது லிங்குசாமி  இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் வில்லியாக நடிக்கிறார். இந்நிலையில், சரத்குமாரின் இன்னொரு  மகளான பூஜா சரத்குமாரும் கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். ஆனால், நடிகையாக அல்ல… காஸ்ட்யூம் டிசைனராக.
 
மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினி, பெண்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குகிறார். ‘ஷக்தி’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், வரலட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில்தான் காஸ்ட்யூம் டிசைனராக  அறிமுகமாகிறார் பூஜா.
 
“பூஜாவுக்கு டிரெஸ் பற்றி நுட்பமான அறிவு உண்டு. நான் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போதெல்லாம், அவள் தான் என் டிரெஸ் விஷயத்தை கவனித்துக் கொள்வாள். எனவே, அதையே அவளுடைய வேலையாக ஆக்கலாம் என முடிவு செய்தோம். இந்தப்  படத்தில் ஏகப்பட்ட பெண்கள் இருப்பதால், அவள் அறிமுகத்துக்கு இதுவே சிறந்த படமாக இருக்கும். அத்துடன், அவளுக்கு நான் உதவியாகவும் இருக்க முடியும்” என்கிறார் வரலட்சுமி சரத்குமார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ...

news

அப்பா-மகன் இணையும் திரைப்படத்தில் நாயகியான ரெஜினா

முதன்முதலாக நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ள படம் ஒன்றை ...

news

விஷால் முடிவு எதிரொலி: மீண்டும் ரிலீஸ் ஆகும் 'விவேகம்

அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி வெளிவந்து கலவையான ...

news

பகுத்தறிவாளர் கமல்ஹாசனா இப்படி கூறினார்?

கமல்ஹாசன் ஒரு பகுத்தறிவாளர் என்பதால் மூட நம்பிக்கைகளுக்கு அவர் இதுவரை இடம் கொடுத்ததே ...

Widgets Magazine Widgets Magazine