தமிழில் அறிமுகமாகும் ‘லூசியா’ ஹீரோ
கன்னடத்தில் வெளியான ‘லூசியா’ படத்தில் ஹீரோவாக நடித்தவர், தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
4 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘லூசியா’. சதீஷ் நீனசம், ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரிலீஸாகி 4 வருடங்கள் ஆனாலும், இதில் நடித்த நடிகர்களுக்கு இன்னும் மவுசு இருக்கிறது. ஸ்ருதி ஹரிஹரன் ஏற்கெனவே தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்க, ஹீரோ சதீஷும் தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தை இயக்கிய அனிஷ் இயக்கும் அடுத்த படத்தில், சதீஷ் தான் ஹீரோ. “நான் நடித்த ‘லூசியா’ படத்தைப் பார்த்துவிட்டு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. அதில், தமிழ்ப் படங்களும் அடக்கம். ஆனால், நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். அனிஷ் இந்தக் கதையை சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை” என்கிறார் சதீஷ்.