செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (22:15 IST)

இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் 2வது பெரிய விருது அறிவிப்பு

தமிழ்த்திரையுலகில் அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை செய்துள்ள நிலையில் இன்று அவருக்கு இந்தியாவின் 2வது உயரிய விருதான 'பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் 3வது உயரிய விருதான 'பத்மபூஷன் விருதினை அளித்து மத்திய அரசு கெளரவித்த நிலையில் தற்போது பத்மவிபூஷன் விருதை அளித்துள்ளது.

இந்த விருது அறிவிப்பு குறித்த தகவல் அறிந்தவுடன் இளையராஜா கூறியபோது, 'இந்த விருதை மத்திய அரசு எனக்கு கொடுத்து கெளரவித்ததாக நான் நினைக்கவில்லை. தமிழகத்தையும் தமிழக மக்களையும் கெளரவித்ததாக நினைக்கின்றேன்' என்று கூறினார். பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு எங்களது வாழ்த்துக்கள்