வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (00:08 IST)

36 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரிலீஸ் ஆகும் கமல் படம்

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான 'வெற்றி விழா' சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல், அமலா, பிரபு, குஷ்பு நடித்த இந்த படம் விறுவிறுப்பான த்ரில் படம் என்பதால் இந்த கால இளைஞர்களையும் இந்த படம் கவர்ந்தது



 
 
இந்த நிலையில் வரும் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த சூப்பர் ஹிட் காமெடி மற்றும் காதல் படமான 'மீண்டும் கோகிலா' திரைப்படம் வரும் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.
 
36 வருடங்களுக்கு பின்னர் டிஜிட்டல் வடிவில் மீண்டும் ரிலீஸ் ஆகும் இந்த படத்தை ஜி.என்.ரங்கராஜன் இயக்கியிருந்தார். கமல், ஸ்ரீதேவி, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.