Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

த்ரிஷா இல்லனா ரகுல்? ராணாவுடன் காதல் கிசுகிசு...

Last Updated: புதன், 31 ஜனவரி 2018 (20:00 IST)
நடிகை ரகுல் மற்றும் நடிகர் ராணா தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளனர். இருவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை, நடிகர்களாக உள்ள நிலையில் இது போன்ற கிசுகிசு பரவிவுள்ளது.

நடிகர் ராணா ஏற்கனவே நடிகை திரிஷாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி இருந்தார். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் நட்பில் முறிவு ஏற்பட்டது.


தற்போது ராணா ரகுல் ப்ரீத் சிங்குடன் காதலில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறார். இது குறித்து ராணாவிடம் கேட்ட போது இருவருக்கும் காதல் எதுவும் இல்லை என்று தெளிவாக கூறினார்.


ஆனால், இந்த விஷயத்தில் ரகுல் கொஞ்சம் கோபமாகவே இருக்கிறார். இது குறித்து ரகுல் கூறியதாவது, நானும் ராணாவும் நெருக்கமான நண்பர்கள். எங்களது நட்பு வட்டாரத்தில் 20 பேர் இருக்கின்றனர். நாங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்களாக பழகிவருகிறோம். ராணாவும் நானும் காதலிப்பதாக வரும் கிசுகிசுவை கண்டு இருவருமே சிரித்தோம் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :