Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குண்டலினி சக்தியை மேலெழுப்புவது எப்படி தெரியுமா?

குண்டலினியை மேலெழுப்புவது எப்படி? சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லாரும் செய்துவிட இயலாது. 
குண்டலினியை எழுப்புவது பற்றியும், நிறைய புத்தகங்கள் வந்து விட்டன. ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி  நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும் போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித்தனியாகத்  தூண்டுவதும் நல்லதல்ல. ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட சக்திநிலை தூண்டப்படும்போது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.
 
சக்திநிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக் கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.


இதில் மேலும் படிக்கவும் :