Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 மொழி பத்திரிக்கையாளரா நித்யா மேனன்?

Last Updated: திங்கள், 8 ஜனவரி 2018 (21:38 IST)
வி.கே.பிரகாஷ் இயக்கும், பிராணா என்ற படத்தில் நித்யா மேனன் பத்திக்கையாளராக நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு பெங்களூரில் கொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷின் கதை என கூறப்படுகிறது.

இது குறித்து நித்திய மேனன் கூறியதாவது, எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கெளரி லங்கேஷ் பாணியிலான கதை என்றாலும் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதத்துக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த சம்பவத்துக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை.


மேலும், பிராணா படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமத்தை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனாலும் புது அனுபவமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :