செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (09:43 IST)

சூர்யாவை உயரமாக காட்ட இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணினோம் – இயக்குனர் தகவல்!

நடிகர் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படம் 17 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து அது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் அந்தகால சுவார்ஸ்யமான அனுபவங்களை பேசியுள்ளார்.

சூர்யாவின் முதல் வசூல் ரீதியான வெற்றி படம் என்றால் அது காக்க காக்க படம்தான். அந்த படம் அஜித் மற்றும் விக்ரம் போன்ற கதாநாயகர்கள் மறுத்ததாலேயே சூர்யாவுக்கு கிடைத்தது. அந்த படத்தில் சூர்யா ஜோதிகா ஜோடி ரசிகர்களின் மனதைக் கவரும் விதமாக அமைந்தது. அந்த படத்துக்கு பிறகுதான் அவர்களுக்குள் காதல் எழுந்தது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து அதன் இயக்குனர் கௌதம் மேனன் ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது படத்தைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட கௌதம், படத்தில் சூர்யாவை உயரமானவராக காண்பிக்க பல ஷாட்களை லோ ஆங்கிளில் படம்பிடித்ததாக சொல்லியுள்ளார்.