திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 23 மார்ச் 2024 (07:21 IST)

சூர்யாவை ஒருநாள் கடனாக தருவீர்களா… ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் பதில்!

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் அவர் சமீபத்தில் ரசிகர்களுடன் சமூகவலைதளப் பக்கத்தில் உரையாடினார்.

அதில் ஒரு பெண் ரசிகை “மேம் நீங்கள் ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் செய்ததை போல ஒருநாள் மட்டும் எனக்கு சூர்யாவை கடனாகத் தருவீர்களா? . நான் சூர்யா எனும் ஜெண்டில்மேனுக்கு 15 ஆண்டுகளாக ரசிகை” எனக் கேட்டிருந்தார். அவருக்கு பதிலளித்த ஜோதிகா “அனுமதி இல்லை” என ஒரே வரியில் கூறியுள்ளார். இந்த உரையாடல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.