வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (07:13 IST)

கங்கனா படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க தயாராகும் ஹாரிஸ் ஜெயராஜ்..!

சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் பாலிவுட்டைத் தவிர்த்து இப்போது கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் மாதவனோடு இணைந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக படங்கள் பெரியளவில் இல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு தேக்கநிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.