வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (16:01 IST)

பிரபல இயக்குனர் மூளைச்சாவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மலையாள படமான சூஃபியும் சுஜாதையும் இயக்கிய இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாள சினிமாவில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் ஷாநவாஸ். அதையடுத்து இவர் கரி மற்றும் சூஃபியும் சுஜாதையும் என்ற படத்தை இயக்கினார். கடைசியாக அவர் இயக்கிய அந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றது. இதையடுத்து ஷாநவாஸ் தனது அடுத்த படத்தின் கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவருக்கு கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.