புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (13:10 IST)

நடனமாடிக்கொண்டே டி வி யை உடைத்த சுட்டிக் குழந்தை!

சமூகவலைதளங்களில் குழந்தை ஒன்று நடனமாடியபடியே தொலைக்காட்சியை கீழே தள்ளி உடைத்தது வைரலாகி வருகிறது.

இணையத்தில் இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் குறும்பு தனங்களை எல்லாம் வீடியோவாக எடுத்து பதிவேற்றி வருகின்றனர். அப்படி ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

அந்த வீடியொவில் அந்த குழந்தை டிவியில் ஓடும் பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சியில் ஆடும் குழந்தை கம்பியை பிடித்து தொங்குவது போல காட்சி இருக்க, அதைப் பார்த்து உணர்ச்சிப் பூர்வமாக தானும் அதுபோல செய்ய முயல தொலைக்காட்சியை பிடித்து தொங்க டிவி கீழே விழுந்து உடைகிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.