செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (11:28 IST)

முதியவர்களுக்கு தபால் ஓட்டு… தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக வழக்கு – இன்று விசாரணை!

தமிழகத்தில் நடக்க உள்ள தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கலாம் எனும் முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தது.

தமிழகத்தின் சட்டமன்றத்துக்கான புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் மே மாதம் நடக்க உள்ளது. இதற்கானப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் செயலர் உமேஷ் சின்ஹா தலைமையில் 6 பேர் உயர்நிலை குழு தமிழகம் வந்து தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதி கிடைக்கபெறும். விருப்பப்படுபவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது.

ஆனால் இந்த முடிவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப் பதிலாக அவர்களுக்கு சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கவேண்டும் எனக் கூறியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று வெளியாக உள்ளது.