வையாபுரி தினமும் யாருக்கு போன் பண்றார்னு தெரியுமா?

Cauveri Manickam (Sasi)| Last Updated: சனி, 7 அக்டோபர் 2017 (12:09 IST)
வையாபுரி தினமும் யாருக்கு போன் செய்து பேசுகிறார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, அதில் கலந்துகொண்ட எல்லாருமே பயங்கர பாப்புலராகிவிட்டனர். முன்பின் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் கூட, நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அதில், மிக  முக்கியமானது வையாபுரி – பிந்து மாதவி நட்பு.
 
ஆரம்பத்தில் யாருடனும் ஒட்டாமல் இருந்த பிந்துவிடம் கலகலப்பாகப் பேசி, அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவர் வையாபுரி. அதன்பின் இருவரும் சேர்ந்து அடித்த கூத்துகளை எல்லாருமே பார்த்தனர். நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் ஆகிறது. இப்போது தினமும் பிந்துவுக்கு கால் பண்ணி பேசுகிறாராம் வையாபுரி. அதுமட்டுமல்ல, ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு  முன்பு கூட பிந்துவிடம் பேசிவிட்டுத்தான் கலந்து கொண்டாராம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :