இயக்குநர் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் தெரியுமா?; அஜித் விளக்கம்
நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு 'விசுவாசம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே இயக்குகிறார். இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது.
அஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வந்தது. இப்படத்திற்கு பிறகு தான் அஜித்திற்கு குடும்ப ரசிகர்கள் அதிகமானார்கள். அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, அப்படியிருந்தும் அஜித் 4-வது முறையாக சிவாவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இதுக்குறித்து அஜித் தன் நட்பு வட்டாரத்தில் கூறுகையில் ‘சிவா எனக்கு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். அவர் வேறு ஒருவருடன் படம் இயக்கச் செல்லும் போது ஹிட் இயக்குனர் என்ற பெயரோடு தான் செல்ல வேண்டும். அதற்காகத் தான் இந்த வாய்ப்பு' என்று கூறினாராம்.