1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:16 IST)

பட்ஜெட் 2018-19: பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு....

தென் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 50% தொகை வரியாக மட்டுமே செலுத்தப்படுகிறது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப தினசரி விலை மாற்றப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 
இந்நிலையில், மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது என தெரிகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 
 
இந்த பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, உணமையில் மத்திய அரசு வரியை குறைக்கும் கட்டாயத்தில் உள்ளது. 
 
அதோடு எண்ணெய் வள துறையும் 2018-19 பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, கலால் வரி குறைக்கப்பட்டால் பெட்ரோல் டீசல் விலை கனிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.