1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (06:30 IST)

நயினார் நாகேந்திரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு! கைதாக வாய்ப்பு என தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வைரமுத்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

இருப்பினும் வைரமுத்து மீது கடுஞ்சொற்களால் பாஜக தலைவர்கள் உள்பட பலர் விமர்சித்து வருகின்றானர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை அவமதித்து பேசுபவர்கள் கொல்லப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சரும், பாஜக பிரமுகருமான நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்

இந்த பேச்சுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன் , அய்யா வைகுண்டர் வழிபாடு சிவசந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட ஆறு பேர் மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.